GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes

GS - Zoology (விலங்கியல்) 

இரத்தம் (Blood) Notes

இரத்தம் (BLOOD)

★ இரத்தம் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு - ஹெமட்டாலஜி

★ இரத்தம் என்பது திரவ நிலையில் உள்ள ஒரு இணைப்பு திசு . ஆனால் சில பண்புகளால் இணைப்பு திசுக்களில் இருந்து வேறுபடுகிறது.

  • ★ இவை இரத்த செல்களிலிருந்து உற்பத்தியாவதில்லை.
  • ★ எந்த விதமான செல் பிரிவு அடைவதில்லை .
  • ★ நார் இழைகள் எதுவும் காணப்படுவது இல்லை .
  • ★ இரத்தத்தின் சுவை - உப்புத்தன்மை.
  • p 7.30 - 7.40
  • ★ நீரைவிட கனமானது. 
  • (இரண்டரை மடங்கு அதிகம்).
  • ★ 100 cc இரத்தம் 20 ml ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும்.
  • ★ ஆண்களில் ஐந்து முதல் ஆறு லிட்டர் வரை காணப்படும்.
  • ★ பெண்களில் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை காணப்படும்.
  • ★ இரத்தத்தின் மூலக்கூறுகளை இரண்டு ஆக்கக்கூறுகளாக பிரிக்கலாம்.


இரத்தத்தின் மூலக்கூறுகள் :



திரவ ஆக்க கூறு
பிளாஸ்மா 
  • தெளிவான மஞ்சள் நிறத்தில் காணப்படும
  • இலேசான காரத்தன்மை கொண்டது.
  • இரத்தத்தில் 55% காணப்படும்.
  • இதில் நீரின் சதவீதம் 92 % , புரதம் 7% மற்றும் உப்பு 1%
  • அல்புமின் - 4.4 % - சவ்வுடு பரவல் அழுத்தத்தை நடைமுறைப்படுத்தும்
  • குளோபிலின் - 2.3 % - எதிர் பொருள் உற்பத்தி தூண்டும்.
  • பைஃப்ரினோஜென் - 0.3 % - இரத்தம் உறைவதில் பங்கேற்கும்.
  • கருவிலுள்ள ரத்த செல்கள் கல்லீரல், மண்ணீரல், தைமஸ் சுரப்பி, நிணநீர் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்ற பல உறுப்புகளில் இருந்து உருவாகின்றன.


திண்ம ஆக்க கூறு
இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) 
  • எரித்ரோசைட்ஸ்/ஆக்ஸிஜன் படகு / Red blood corpuscles
  • உட்கரு அற்றவை. முதலில் உருவாகும் போது உட்கரு இருக்கும், வளர்ச்சி அடையும் போது உட்கருவை இழக்கும்.
  • ஆண்களில் எண்ணிக்கை - 5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
  • பெண்களில் எண்ணிக்கை - 4.5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
  • குழந்தைகளில் எண்ணிக்கை - 6.5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
  • கருவில் எண்ணிக்கை - 8.5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
  • இருபுறமும் குவிந்து தட்டு வடிவில் காணப்படும்.
  • 7.8 மைக்ரான் விட்டம் கொண்டது.
  • வடிவத்தை விவரித்தவர் கென்ட்ரு மற்றும் பெரூட்ஸ்
  • 2.5 மைக்ரான் தடிமன் கொண்டது.
  • மேல் உறையின் பெயர் : டோனன் உறை.
  • இதில் உள்ள ஹீமோகுளோபின் (Hb) என்னும் புரதத்தால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கின்றது. இதற்கு சுவாசநிறமி என்று பெயர்.
  • இது ஆக்ஸிஜன் கடத்தலில் பங்கு எடுப்பதால் இது ஆக்ஸி ஹீமோகுளோபின் என அழைக்கப்படுகின்றது.

  • Hb + 42Hb  எண்ணிக்கை அளக்கும் கருவி : ஷாலி ஹிமோ மீட்டர்
  • ஆண்களில் Hb எண்ணிக்கை - 15.8 மில்லி கிராம் / 100 ml
  • பெண்களில் Hb எண்ணிக்கை - - 13.7 மில்லி கிராம் / 100 ml
  • குழந்தைகளில் Hb எண்ணிக்கை - 16.5 மில்லிகிராம் / 100 ml
  • மூலக்கூறு எண்ணிக்கை - 68000 டால்டன்
  • மூலக்கூறு வாய்ப்பாடு - 3032481687278084.
  • 4 மூலக்கூறு ஹீம் + 1 மூலக்கூறு குளோபின் = ஹீமோகுளோபின்


இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி 
  • இவை சிவப்பு எலும்பு மஜ்ஜைகளில் உற்பத்தி ஆகின்றன.
  • இவை விலா எலும்பு மற்றும் முள் எலும்புகளில் காணப்படுகின்றது.
  • இயல்பான இரத்த குளுக்கோஸ் அளவு 70-120 mg/100ml.



  • RBC முதிர்ச்சியடைய 72 மணிநேரம் தேவைப்படும்.
  • ஒரு நிமிடத்திற்கு இரண்டு முதல் 10 மில்லியன் வரை உற்பத்தி மற்றும் அழிவு ஆகும்.
  • இதன் வாழ்நாள் ஆண் - 120 நாள், பெண் - 110 நாள்
  • வாழ்நாள் கண்டறிய உதவும் ரேடியோ கதிர் இயக்க தனிமம் குரோமியம் 51.
  • RBC - மண்ணீ ரலில் அழிக்கப்படுகிறது. மண்ணீ ரல் RBC-ன் சுடுகாடு எனப்படுகிறது.
  • இவை அழிக்கப்படும் போது பிலிரூபின் (மஞ்சள் நிறம்), பிலிவிரிடின் (பச்சை நிறம் ) என்ற நிறமிகளாக மாற்றப்படுகிறது.
  • இவை கழிவுபொருள்கள் மற்றும் சிறுநீரின் நிறத்திற்கு காரணமாக அமைக்கின்றது.
  • RBC, WBC எண்ணிக்கை அளக்கும் கருவி : ஹீமோசைட்டோ மீட்டர்
  • RBC நீர்க்கும் திரவம் : ஹேயம்ஸ்
  • WBC நீர்க்கும் திரவம் : டர்க்ஸ்


நோய்கள் 
  • பாலிசைத்திமியா- இரத்தத்தில் RBC எண்ணிக்கை அதிகரிப்பு
  • அனிமியா - இரத்தத்தில் RBC எண்ணிக்கை குறைவு
  • ஹைபோகுரோமிக் அனிமியா - உணவில் இரும்பு சத்து குறைப்பாடு
  • பெர்னிசினியஸ் அனிமியா - வைட்டமின்12 குறைப்பாடு
  • மெகாலாபிளாஸ்டிக் அனிமியா - போலிக் அமில குறைப்பாடு
  • சிக்கில் செல் அனிமியா - மரபியல் குறைபாடு
  • தாலசிமியா - மரபியல் குறைபாடு
  • அப்லாஸ்டிக் அனிமியா - மருந்து அதிகம் எடுத்துக்கொள்வதால்
  • ஹீமோலைட்டிக் அனிமியா - பாம்பு விஷம் ஏறுவதால்
  • செப்டிசிமியா- இரத்தத்தில் விஷம் கலப்பதால்
  • இரத்தத்தின் வெப்பநிலை 38°C.


பணிகள் : 
  • ஆக்ஸிஜனை செல்களுக்கு கடத்துதல்
  • கார்பன் டை ஆக்ஸைடை வெளி கடத்துதல்
  •  சரி செய்தல்


இரத்த நிறம்: 
  • Fe - சிவப்பு நிறம்
  • Cu - நீல நிறம்
  • Mn - பிரவுன் நிறம்
  • Mg - நிறமில்லை


இரத்த வெள்ளை அணுக்கள்(WBC) 
  • உடலின் போர்படை வீரர்கள் / லியூகோ சைட்ஸ் / White Blood Corpuscles.
  • வெள்ளை நிறம் காரணம் Hb நிறமி இல்லை .
  • RBC ஐ விட குறைவான எண்ணிக்கை
  • RBC : WBC = 600:1
  • எண்ணிக்கை 8000 -10000 / கன மில்லிமீட்டர்
  • ஆயுட் காலம் 3-4 வாரங்கள்
  • தெளிவான உட்கருவை கொண்ட அமிபாயிடு செல்கள்

WBC
ஒற்றை உட்கரு கொண்டவைமாறும் உட்கரு கொண்டவை
1. லிம்போசைட்ஸ் 26%1. ஈசினோபில் (அ) அசிடோபில் 2.8%
2. மோனோசைட்ஸ் 6% 042. நியூட்ரோபில் 65% 3. பேசோபில் 0.2%

லிம்போசைட்ஸ் : 
(நிணநீர்ச் செல்கள் ) 
  • சிறிய அளவு கொண்டவை
  • 7 மைக்ரான் விட்டம் .
  • வாழ்நாள் மூன்று நாட்கள்
  • பாக்டீரியங்களை அழிக்க B செல்களை உற்பத்தி செய்கின்றன.
  • வைரஸ்களை அழிக்க T செல்களை உற்பத்தி செய்கின்றன.

மோனோசைட்ஸ் / Macro Policeman : (ஒற்றை செல்கள்) 
  • பெரிய அளவு கொண்டவை
  • 22 மைக்ரான் விட்டம்
  • வாழ்நாள் 28 நாட்கள்
  • இறந்த செல்களை விழுங்கி செரிக்கும் தன்மை கொண்டவை.

ஈசினோபில் (அ) அசிடோபில் : 
  • நியூக்ளியஸ் இரண்டாக பிளவு பட்டு இருக்கும்
  • இயக்க சக்தி அதிகம்.
  • வாழ்நாள் சில மணிநேரம் மட்டும்

நியூட்ரோபில் / Micro Policeman : (நடுவமைச் செல்கள் ) 
  • WBC - ல் அதிக எண்ணிக்கை கொண்டது
  • நியூக்ளியஸ் பல பிளவு கொண்டது.
  • வாழ்நாள் இரண்டு முதல் நான்கு நாட்கள் .
  • 10 மைக்ரான் அளவு கொண்டது.
  • நொதிகளை கொண்டு நுண் கிருமிகளை செரித்து விழுங்கும் தன்மை கொண்டது.

பேசோபில் : (கராச்சாயமேற்பிகள்) 
  • WBC - ல் குறைந்த எண்ணிக்கை கொண்டது .
  • வாழ்நாள் 12 முதல் 15 நாட்கள் வரை
  • இவை ஹெப்பாரின் எனும் பொருளால் இரத்த குழாய்களுக்குள் இரத்த உறைதலை தடுக்கின்றது.

வேலை : 
  • வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகள் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கின்றது.
  • உடலினுள் கிருமிகள் புகுந்தால், அவைகளை அழித்து, செரித்து விடும் தன்மை கொண்டவை.

ஆன்டிஜென் :

உடலின் உள்ளே செலுத்தப்பட்ட ஒரு பொருள், எதிர்ப்பு பொருள் உருவாக்கத்தைத் தூண்டி அதனுடன் குறிப்பிட்ட முறையில் வெளிப்படையாக வினைபுரிந்தால் அது ஆன்டிஜென் எனப்படும்.

ஆன்டிபாடி :

உடலில் உள்ள நிணநீர் முடிச்சுகள், மண்ணீரல், கல்லீரல், எலும்புமஜ்ஜைகள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு செல்கள் இம்யுனோகுளோபின் எனும் புரதப் பொருட்களை அன்னிய பொருட்களின் செயலை முறியடிக்க உருவாக்குகின்றன.இவையே நோய் எதிர்ப்பு பொருள் (அ) ஆன்டிபாடி எனப்படும்.

நோய்கள் : 
  • WBC இரத்தத்தில் அதிகரித்தால் - லூயூகிமியா (இரத்தப்புற்றுநோய்)
  • WBC இரத்தத்தில் குறைந்தால் - லூயூகோபீனியா
  • ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜை(Bone Marrow) இரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா - மற்றும் இரத்த தட்டுக்களை மாறாத அளவில் உற்பத்தி செய்கிறது.


இரத்தத் தட்டுக்கள் (Blood Platelets) 
  • பெயரிட்டவர் Bizzozero
  • பாலூட்டிகளில் மட்டும் காணப்படுகின்றன.
  • உட்கரு இல்லை
  • ஒழுங்கு அற்ற வடிவம்.
  • எலும்பு மஜ்ஜைகளில் உள்ள செல்களிலிருந்து உற்பத்தியாகின்றது.
  • எண்ணிக்கை 2,00,000 - 4,00,000 / கனமில்லிமீட்டர்
  • வாழ்நாள் 5-9 நாட்கள்
  • கண்டறிய உதவும் ரேடியோ கதிர் இயக்க தனிமம் DPF32
  • இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது த்ரோம்போசைட்டுகள்
  • அழிக்கப்படுவது கல்லீரல் அல்லது மண்ணீரல்
  • இரத்தத்தில் அதிகமானால் - த்ராம்போ சைதீமியா
  • இரத்தத்தில் குறைந்தால் - த்ராம்போ சைட்டோபீனியா

இரத்தம் உறைதல் (ஹீமோஸ்டாசிஸ்)

இரத்தக் குழாயை விட்டு இரத்தம் வெளிவந்ததும், திரவதன்மையை இழந்து கூழ் போன்ற ஜெல்லியாக மாறுவதே இரத்தம் உறைதல் எனப்படும்.

முதலில் கண்டறிந்தவர் ஷ்கிமிஸ்ட் 1892 மற்றும் விவரித்தவர் மோரா விஸ்ட் .

இரத்தம் உறைதலின் போது ஏற்படும் புரத இழைகளின் பெயர் பைப்ரீன் . இது இரத்ததுகள் அணுக்கள் வெளிவருவதை தடுக்கின்றது.

உறைதல் காரணிகளான புரதங்கள் அனைத்தும் இரத்த பிளாஸ்மாவில் உறங்கும் நிலையில் உள்ளது. இது காயம் ஏற்பட்ட உடனேயே செயல்படும் நிலைக்கு மாற்றப்பட்டு உறைதலை ஏற்படுத்துகின்றது.

இரத்த உறைதல் காரணிகள் மொத்தம் 13 உள்ளது.

  • த்ராம்போகைனேஸ் என்சைம் உற்பத்தி : காயம் அடைந்த இரத்த தட்டு செல்கள் உடனே த்ராம்போபிளாஸ்டின் எனும் லைப்போ புரதத்தை உண்டாக்கும். இது இரத்தத்தில் உள்ள சில காரணிகளுடன் சேர்ந்து த்ராம்போகைனேஸ் என்ற நொதியை உண்டாக்கும்.
  • பிளாஸ்மா புரதமான புரோத்ராம்பின் Cacle அயனிகள் உதவியுடன் இந்த நொதியின் மூலமாக த்ராம்பின் ஆக மாற்றப்படும்.
  • புரோத்ராம்பின் உற்பத்திக்கு வைட்டமின் K அவசியம்
  • கரையும் பிளாஸ்மா புரதமான பைபீரினோஜன் கரையாத பைப்ரின் ஆக மாற்றப்படும்.
  • இந்த நிகழ்ச்சி நடைபெற ஆகும் நேரம் 5-8 நிமிடம்.
  • இரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் கல்லீரலில் உருவாக்கப்படுகிறது. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு - 9.3 கலோரிகள்



இரத்தம் உறையாமை (ஹீமோபிலியா) 
  • இது ஒரு பரம்பரை வியாதி
  • பால்சார்ந்த குரோமோசோம்களில் உள்ள ஜீன்கள் மாறுபாடு அடைவதால் இரத்தம் உறையும் செயல்முறையில் குறைபாடு ஏற்பட்டு இரத்தப்போக்கு தொடர்ந்து வெளியேறி இறப்பு ஏற்படும். இது முதன் முதலில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கண்டறியப்பட்டது. கண்டறிந்தவர் ஜான் கோட்டா (1803)


இரத்த வகைகள் :
  • கார்ல் லேண்ட் ஸ்டீனர் 1900
  • A, B, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார் கார்ல் லான்ட்டு ஸ்பீனர் 1900
  • AB வகை இரத்தம் கண்ட றிந்தவர். De-castello and Sturli
  • உலகில் மிக அதிகம் உள்ளது O வகை இரத்தம்.
  • உலகில் மிக குறைவாக உள்ளது AB வகை இரத்தம்.
  • இதுவரை உலகில் 103 வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 14 வகை மட்டும் பெரும்பாலான பயன்பாடு கொண்டது.


இரத்தம் ஏற்றும் முறை :

இரத்தம் ஏற்றும் முறையில் கொடுப்பவரின் RBC ல் உள்ள ஆன்ட்டிஜென்னும், பிளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடியும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.


  • A group வகை இரத்தம் B group ஆட்களுக்கு சேராது. ஏற்றினால் இரத்தம் ஒட்டிக்கொண்டு இறப்பு ஏற்படும்.
  • O group வகை இரத்தம் - முழு நிறை கொடையாளர் / உலகளாவிய தானம் கொடுப்பவர். இதில் ஆன்டிஜென்கள் கிடையாது. அதனால் எவருக்கும் இரத்தம் கொடுக்கலாம்.
  • AB வகை - முழு நிறை பெறுநர்/ உலகளாவிய இரத்தம் ஏற்பவர். இதில் ஆன்டிபாடிகள் கிடையாது. அதனால் எவரிடம் இருந்தும் இரத்தம் ஏற்கலாம்.

  • இரத்த தானத்தின் போது உறைதலை தடுக்க சேர்க்கப்படுவது
  • சோடியம் சிட்ரேட் உப்பு
  • அலுமினியம் ஆக்சலேட் உப்பு
  • பொட்டாசியம் ஆக்சலேட் உப்பு
  • EDTA – Ethylene Di Amine Tetra Acetic Acid
  • கிரானுலோசைட் என்பது ஒரு வகையான ரத்த வெள்ளையணுக்கள். இது இரத்த நாளச் சுவர் மீது ஒட்டிக் கொண்டு பாக்டீரியாவைத் தேடி அதனைச் சூழ்ந்து கொண்டு அழிக்கிறது.


மூன்று வகையான இரத்த உயிரணுக்களின் சிறப்பியல்புகளும், ஒப்பீடும்:


  • தானம் பெறப்பட்ட இரத்தத்தை - 4° முதல் - 6° C வரை குளிரில் வைத்தால் நீண்ட நாள் பாதுகாப்பு கிடைக்கும்.
  • இரத்தத்திலிருந்து உடனே Ca அயனிகளை நீக்கி விட்டால் இரத்தம் உறையாது
  • அட்டை உறிஞ்சும் இரத்தம் உறையாமல் இருக்க அதன் உமிழ்நீரில் ஹிருடின் எனும் சுரப்பி பொருள் கலந்து விடுவதால் இரத்தம் உறைவதில்லை.
  • மனித உடலில் இரத்த குழாய்களுக்குள் இரத்தம் உறைவதை தடுக்க ஹெப்பாரின் புரதம் பயன்படுகிறது.


நிறமிகள்நிறம்
ஹீமோகுளோபின்சிவப்பு
ஹீமோசையானின்நீலம்
குளோரோகுரோனின்பச்சை
பின்னோகுளோபின்பழுப்பு

இரத்தத்தின் பணிகள்
 

  • உடல் வெப்பநிலையை சீராக வைக்கும். உடல் முழுவதும் 
  • 2கடத்தும். பிளாஸ்மா - உணவு, ஹார்மோன், நொதிகளை கடத்தப்பயன்படுகிறது.
  • WBC - நோய் பாதுகாப்பு அளிக்கின்றது.
  • மையவிலக்கி எனப்படும் சாதனத்தில் இரத்தம் சுழலுவதால் இரத்த செல்களிலிருந்து இரத்த பிளாஸ்மாக்களை பிரிக்க முடியும்.


Rh வகை 
  • இரத்தத்தின் இன்னொரு வகைபாடு Rh+ வகை , Rh - வகை.
  • கண்டறிந்தவர் கார்ல் லான்ட்டு ஸ்டீனர் & வீனர் - 1940
  • Rh காரணி உடலில் உள்ளவர்கள் Rh+ என்று அழைக்கப்படுகின்றன.
  • உலகில் 70 - 85 % Rh+ உள்ளனர். ஆனால் எல்லாருக்கும் சேர கூடியது Rhவகை .
  • முயலின் உடலில் ரீசஸ் இன குரங்கின் இரத்தம் ஏற்றப்பட்டு தடுப்பாற்றல் உண்டாக்கப்படுகிறது.
  • இந்த எதிர்பொருள் கொண்ட முயலின் சீரம், மனிதன் இரத்தத்தில் கலக்கும் பொழுது திரட்சி ஏற்பட்டால் அந்த மனிதன் Rh+ வகை, திரட்சி இல்லை என்றால் Rh -வகை ஆகும்.
  • எனவே இரத்த ஏற்றம் செய்வதற்கு முன்பு ABO இரத்த வகையுடன் Rh காரணிக்கான சோதனை அவசியம்.


எரித்ரோபிளாஸ்டோசிஸ் பீட்டேலிஸ் 
  • Rh - தாய், Rh+ கருவை தாங்கினால் இரத்தத்தில் திரட்சி ஏற்படும். இது முதல் கருவுறுதலில் நிகழாமல் 2வது கருவுறுதல் நடக்கும் போது RBC அழிந்து அனீமியா ஏற்பட்டு கரு இறக்கும். இந்த குழந்தை Blue Baby எனப்படும்.
  • இதனால் அனைத்து Rh- பெண்களுக்கும் முதல் பிரசவத்திற்கு பிறகு Rh சோதனை செய்யப்பட்டு அதற்கான காரணி Anti - D Injection உடலில் ஏற்றப்படுகின்றது. இதனால் இரண்டாவது கருவுறுதலில் பெண்களுக்கு எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை.


மரபணு ஆக்கம்

ABO பிரிவுக்கான மரபணுவிற்கு I எனும் குறியீடு வழங்கப்பட்டது.

  • எனும் அல்லில் ஆன்டிஜென் A க்கான நொதி உண்டாக்கும் .
  •  எனும் அல்லில் ஆன்டிஜென் B க்கான நொதி உண்டாக்கும்
  • எனும் அல்லில் எதையும் உருவாக்குவதால் பங்கு கொள்வதில்லை.
  • எனவே அல்லில்கள் 6 வகையான மரபணு ஆக்கங்களையும் 4 வகையான வெளிபாடுகளையும் கொண்டுள்ளன.



வாரிசு பிரச்சினைகளும் இரத்த வகைகளும் 

  • பெற்றோரின் இரத்த வகைகளுக்கு ஏற்ப அவர்களது வாரிசுகளின் இரத்த வகை சாத்திய கூறுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
  • குறிப்பிட்ட பெற்றோருக்கு எவ்வகை இரத்த பிரிவுள்ள குழந்தை பிறக்காது என்பதும் புலன் ஆகும்.



Previous Year Questions:

1. குருதியில் உள்ள உலோகம்
A). AI,    
B). Mg,  
C) Fe,  
D) Cu,

2. இரத்தத்தின் pH மதிப்பு
A). 55    - 75
B). 45   - 5.5
C). 7.3 - 7.5
D). 4.0 - 4.4

3. சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு 
A). மனிதன்
B).பறவை
C).மண்புழு
D). கரப்பான் பூச்சி √√√√√

4. இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
A). வைட்டமின் D மற்றும் கால்சியம்
B). வைட்டமின் B மற்றும் சோடியம்
C).வைட்டமின் K மற்றும் கால்சியம் √√√
D). வைட்டமின் C மற்றும் அயோடின்

5..இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
A) நோய் எதிர்ப்புத்தன்மை
B) வாயுக்கடத்தல். 
C) இரத்தம் உறைதல் √√√√√
D) கார அமில சமன்பாடு

6. எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
A). A+
B). O √√√√√√√
C). B -
D).AB






Comments

Popular posts from this blog

TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!

TNPSC - உருவான வரலாறு | History of TNPSC inTamil