TNPSC பொதுத்தமிழ் – சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் | TNPSC General Tamil - Ordering words into phrases
TNPSC பொதுத்தமிழ் – சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்..!
TNPSC General Tamil - Ordering words into phrases ..!
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
1. எழுவாய் பயனிலை அமைப்பு:
எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும்.
நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்ஃகள் அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன.
வண்டி ஓடும் வண்டிகள் ஓடும்
மரம் விழும், மரங்கள் விழும்
எழுத்தறிவித்தவன், இறைவன் ஆகும்
நாட்டை ஆண்டவன் அரசன் ஆகும்.
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் வினைகள் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால், போன்ற நான்கு பாலுக்கும் வரும்.
தன்மை, முதனிலை, படர்க்கை (பலர்பால்) இவற்றில் செய்யும் என்னும் வாய்பாடு முற்று வராது.
வண்டி ஓடியது வண்டிகள் ஓடின.
பறவை பறந்தது பறவைகள் பறந்தன.
குதிரை மேய்ந்தது குதிரைகள் மேய்ந்தன.
2. எழுவாய் செயப்படுபொருள் பயனிலை அமைப்பு:
இராமன் வில்லை வளைத்தான் – எனத் தொடர் அமையும்.
3. தொகுதி பெயர் : ஒன்றன் பால்விகுதிபெறும்
ஊர் சிரித்தது
உலகம் அழுதது.
4. பெயரெச்சத்தின் முடிவில் பெயர்வரும்:
இன்று வந்த மழைக்காலம் என அமையும்.
இன்று மழை வந்த காலம் எனத் தொடர் அமையாது. கோயிலுக்குப் போன மாலா திரும்பினாள் என அமையும்.
5. வினையெச்சத்தை அடுத்து வினை வரும்:
(வினையெச்சத்தில் அடைச்சொற்கள் சில வரும்)
முருகன் வந்து போனான், முருகன் வேகமாக வந்து போனான்.
6. செயப்படு பொருளும் வினையெச்சமும் வரும் போது முதலில் செயப்படு பொருள் வரும்:
இராமன்/ வில்லை / வளைத்துப் / புகழ் / பெற்றான்.
அவன் / பெண்ணைக் / கொடுத்துத் / திருமணம் செய்வித்தான்.
முருகன் / அரக்கனை /அழித்து / வெற்றி / பெற்றான்.
நான் / பணத்தைக் / கொடுத்துப் / பழம் / வாங்கினேன்.
நான் பணம் கொடுத்துப் பழம் வாங்கினேன் என்று அஃறிணையில் ‘ஐ’ மறைந்தும் வரும்.
7. பெயரடை சிதறாது /பெயரை விட்டு விலகாது:
நான் நேற்று நல்ல பையனைப் பார்த்தேன் (பெயரை – மத்தியில் எதுவும் வராது)
நான் நேற்று (என்வீட்டிற்குப் பக்கத்திலிருந்த குடியிருந்த நல்ல பையனைப்) பார்த்தேன்.
நான் கடையில் (திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளை) வாங்கினேன்.
பெட்டியில் உள்ள சொற்கள் சிதறாது.
8. வேற்றுமை உருபுகள்: (2 – ஐ, 3-ஆல், 4-கு, 5-இன், 6-அது, 7-கண்)
அ) 2 – 3 நான் முருகனைப் பார்த்தேன்
நான் முருகனைக் கண்ணால் பார்த்தேன்
என இரண்டாம் வேற்றுமை உருபு முதலில் வந்து மூன்று வேற்றுமை உருபு அடுத்து வரும்.
ஆ) 4 – 2 – 3 கு – ஐ – ஆல்
தாய் குழந்தைக்கு உணவைக் கையால் ஊட்டினாள்
இ) 4 – 2 – 7 கு – ஐ – கண் (இடம்)
இராமனுக்கு புத்தகத்தை கடையில் வாங்னேன்
ஈ) 3 – 2 – 3 ஆல் – ஐ – ஆல்
கண்ணால் பார்த்தவனைக் கையால் அடித்தேன்
9. விளிச்சொல் முதலில் நிற்கும்:
இராமா இங்கே வா (சரியானது)
இங்கே வா இராமா (தவறானது)
Comments
Post a Comment