TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் | TNPSC - Grammar Reference.!
TNPSC - இலக்கணக் குறிப்பறிதல் TNPSC - Grammar Reference..! Mr TNPSC, இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கணம் ◆ இலக்கணம் ஐந்து வகைப்படும்: 1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம் ◆ எழுத்தின் வகைகள்: எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் 1. உயிரெழுத்துகள் 2. சார்பெழுத்துகள் ◆ முதலெழுத்துகளின் வகைகள்: முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும் 1. உயிரெழுத்துகள் 2. மெய்யெழுத்துகள் ◆ உயிரெழுத்துகளின் வகைகள்: உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும் 1. குற்றெழுத்துகள் (அ இ உ எ ஒ) 2. நெட்டெழுத்துகள் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள) ◆ மெய்யெழுத்துகளின் வகைகள்: மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும் 1. வல்லினம் (க் ச் ட் த் ப் ற்) 2. மெல்லினம் (ங் ஞ் ண் ந் ம் ன்) 3. இடையினம் (ய் ர் ல் வ் ழ் ள்) ◆ ஆய்த எழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ◆சார்...