TNPSC - பொதுத்தமிழ் சங்க இலக்கியம்...!
TNPSC - பொதுத்தமிழ் சங்க இலக்கியம்...!
◆ சேர மன்னர்கள் பத்துபேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல் எது?
- பதிற்றுப்பத்து
◆ பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள திணை எது?
- பாடாண் திணை
◆ பதிற்றுப்பத்தில் கிடைக்காத பகுதிகள் எது?
- முதல் பத்தும் இறுதிப் பத்தும்
◆ பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாட்டுடை தலைவன் யார்?
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
◆ இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றி பாடியதால் குமட்டூர்க் கண்ணனார் பரிசாக பெற்றது எது?
- உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும்
◆ 'யாணர்" எனும் சொல்லின் பொருள்?
- புது வருவாய்
◆ மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த ஆண்டு?
- 1900
◆ மயிலை சீனி. வேங்கடசாமி இயற்றிய நூல்கள்?
கொங்கு நாட்டு வரலாறு,
துளுவ நாட்டு வரலாறு,
சேரன் செங்குட்டுவன்,
மகேந்திரவர்மன்,
நரசிம்மவர்மன்,
மூன்றாம் நந்திவர்மன்
◆ மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு?
- 1980
◆ களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலை இயற்றியவர் யார்?
- மயிலை சீனி. வேங்கடசாமி
◆ வடமொழியில் எழுதப்பட்ட ------------- என்னும் காவியத்தை தழுவி பாரதிதாசனால் புரட்சிக்கவி நு}ல் எழுதப்பட்டது. - பில்கணீயம்
◆ பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக -------------- என்னும் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
- கனக சுப்புரத்தினம்
◆ பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
- பாவேந்தர் பாரதிதாசன்
◆ 'ஓதுக" எனும் சொல்லின் பொருள்?
- சொல்க
◆ பாரதிதாசனால் இயற்றப்பட்ட காப்பியங்கள்?
- குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம்
◆ பாரதிதாசனின் எந்த நாடகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?
- பிசிராந்தையார்
◆ ------------- என்ற பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
◆ பாரதிதாசனின் பெயரில் தமிழக அரசு நிறுவிய பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
- திருச்சி
◆ பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் எது?
- குயில்
◆ 'தமிழ்க்கவிஞர்" என்பதன் இலக்கணக்குறிப்பு?
- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Comments
Post a Comment