சிந்து சமவெளி நாகரிகம்..! Indus Valley Civilization..!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
சிந்து சமவெளி நாகரிகம்..!
Indus Valley Civilization..!
By: Mr.TNPSC,
சிந்து சமவெளி நாகரிகம்..!
Indus Valley Civilization..!
By: Mr.TNPSC,
★ ஹரப்பாவின் சிதைவடைந்த பகுதிகளை சார்லஸ் மேசன் என்பவர் தம்முடைய (Narrative of Various Journeys In Balochistan, Afghanistan and Punjab) , என்ற நூலில் குறிப்புகளில் 1838ல் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை.
★ இந்நாகரிகத்தின் பெரும் பகுதி காக்ரா | நதிக்கரையின் மேல் அமைந்துள்ளதால் இதனை Indus Ghaggar Hakra Civilization என்றும் கூறுவர்.நதியின் அடிப்படையில் சிந்து-சரஸ்வதி ,சரஸ்வதி நாகரிகம் என்றும் கூறுவர்.
★ சர் ஜான்மார்சல் கூற்றுப்படி கி.மு. 3250 முதல் 2750 வரை
★ 1945ஆம் ஆண்டு அகழ்வராச்சி நடத்திய மார்ட்டிமர் வீலர் கி. மு. 2500 ஆண்டிற்கும் கி.மு. 1500 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம் சிந்து சமவெளி நாகரிகம் காலம் என குறிப்பிட்டுள்ளார்.
★ அகர்வாலின் கூற்றுப்படி கி.மு. 2300 முதல் 1750 வரை
★ 1784ல் Asiatic Society of India என்ற சங்கத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் நிறுவினார். இச்சங்கம் பண்டைய கல்வெட்டுக்களை சேகரித்தது.
★ இவற்றில் உள்ள எழுத்துக்களை ஜேம்ஸ் பிரின்செப் 1837ல் படிக்கும் முறையை கண்டுபிடித்தார்.
★ கி.பி. 1826ம் ஆண்டு ஹரப்பாவுக்குச் சென்ற சார்லஸ் மேசன் என்பவர் அங்கு குடியிருப்புகளின் சிதைவுகளைக் கண்டார்.
★ 1872ம் ஆண்டு கன்னிஸ்ஹாம் அலெக்சாண்டர் ஹரப்பாவின் சில பொருட்களை சேகரித்தார்.
★ 1862ல் தொல்லியல் துறை நிறுவப்பட்டது. இதன் முதல் இயக்குநராக அலெக்சாண்டார் கன்னிங்ஹாம் நியமிக்கப்பட்டார். இவர் இந்திய தொல்பொருள் இலாக்காவின் தந்தை எனப்பட்டார்.
★ Alexander Cunningham, the first Director - General of the Archaeological Survey of (ASI), (ASI ),India பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ளது) தற்போது.
★ கன்னிங்ஹாம் புத்த மதம் தொடர்புடைய காஞ்சி, சாரநாத், புத்தகயா, தட்சசலம் போன்ற இடங்களில் உள்ள அரிய வரலாற்று சின்னங்களை கண்டுபிடித்தார்.
★ பின் ஆராய்ச்சி துறை நிறுவப்பட்டது. சார் ஜான் மார்ஷல் என்பவர் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரையும் தொல்லியியல் துறையின் தந்தை என்று கூறுவர்.
★ தொல்பொருள் தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் இந்திய வரலாற்றை எழுதியவர்: வி.ஏ. ஸ்மித் ஆவார்.
★ சர் ஜான் மார்ஷல் என்பவர் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி தலைவராக இருந்த போது அவர் 1922ம் ஆண்டு ஆர்.டி.பானர்ஜி என்பவருட்ன சேர்ந்து ஒரு புதைந்து கிடந்த புத்த மடாலய அகழ் ஆராய்ச்சி பணியில் இருந்த போது சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடித்தார்.
★ அதன் பிறகு ஜே. எஜ். மேக்கே, ஜி. எஃப். டேல்ஸ், எம். எஸ். வாட்ஸ் ஆகியோர் மொகஞ்சதாரோவில் அகழ்வராய்ச்சியை மேற்கொண்டனர்.
★ சிலர் இதனை Garden of Sind என்றும் Nakhlistan என்றும் கூறுவர். சிந்து நதி இதனை 9 முறை அழித்ததாகவும் 9 முறை இந்த நகரம் கட்டப்பட்டது என்றும் கூறுவர்.
★ இவர்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற இடங்களில் வாணிகம் செய்தனர் சுமேரியா நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் ஒற்றுமை இருந்ததால் இதனை இந்தோ-சுமேரிய நாகரிகம் என்றும் பின் இது தனிநாகரிகம் என்பதால் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்டது.
★ சிந்து சமவெளி மக்கள் சிவனை வணங்கினர். ஹரப்பா நகரங்களில் இலிங்க தெய்வம். விலங்குகள் சூழப்பட்ட மூன்று தலைக்கொண்ட யோக நிலையில் உள்ள பசுபதி எனப்படும் கடவுளின் முத்திரை உருவங்கள் கிடைக்கப்பெற்றது.
★ 1925 அகழ்வாராய்ச்சிகள் மொஹஞ்சதாரோவில் ஆரம்பம் 1946 R. E. M. வீலர் ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி செய்தார்
★ 1955 எஸ்.ஆர். ராவ் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார்
★ லோதல் 1960 பி.பி.லால் மற்றும் பி.கே.தாபர் தொடங்குகின்றனர்
★ காளிபங்கனில் அகழ்வாராய்ச்சிகள்.
★ 1974 எம்.ஆர். முகல் ஆய்வுகளை தொடங்கினார்
பஹவல்பூர் :
★ 1980 ஜெர்மன் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்பரப்பைத் தொடங்கியது.
மொஹஞ்சதாரோவில் ஆய்வுகள் :
★ 1986 ஹரப்பாவில் அமெரிக்கக் குழு அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது
★ 1990 ஆர்.எஸ்.பிஷ்ட் தோலாவிராவில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார்
சிந்து சமவெளி நாகரிகத்தின்
முக்கிய நகரங்கள்:
1. மொகஞ்சதாரோ
2. ஹரப்பா
3. லோதால்
4. களிபங்கன்
5. பாண்குவா
6. அம்ரி
7. ரூப்பர்
8. சாண்கு தாரோ ,
ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளன.
Comments
Post a Comment