மொஹஞ்சதாரோ பற்றிய பாட குறிப்புகள்...!
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, History Notes :
மொஹஞ்சதாரோ பற்றிய பாட குறிப்புகள்...!
Mr.TNPSC,
UPSC, TNPSC, SSC, RRB, IBPS, Notes :
மொஹஞ்சதாரோ பற்றிய பாட குறிப்புகள்...!
Mr.TNPSC,
★ இதன் மொத்த பரப்பளவு 125 ஹெக்டேர் ஆகும்.
★ 1922-ல் ஆர்.டி. பானர்ஜி அகழிவராய்ச்சி செய்தார்.
★ சிந்து நதிக்கரை மேல் அமைந்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் லார்கானா மாவட்டத்தில் உள்ளது.
★ இரும்பின் பயன் தெரியவில்லை.
★ நகரங்கள் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருந்தன.
★ தெருக்கள் நேராகவும் அகலமாகவும், கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும்,அமைந்துள்ளது.
★ மொஹஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது. இது 11.8 மீ நீளமும்,7.01 மீ அகலமும் 2.43 மீ ஆழமும் கொண்டது.
★ ஆடைமாற்றும் அறை காணப்பட்டது. இக்குளத்தில் நீர் உள்வர செங்கல்லால் குழாய்கள் உள்ளன.
★ நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன. சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டது.
★ தானியக்களஞ்சியமும், நடனமாது சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
★ கோதுமை, பார்லி முக்கிய உணவாகும்.
★ மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.
★ இசை, நடனம், கோழிச் சண்டை, காளை சண்டை போன்றவை நடைபெற்றது.
★ மக்கள் சித்திர எழுத்துக்களை பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என இராசு பாதிரியார் கூறுகிறார்.
★ அவர்கள் எழுத்துக்களை வலமிருந்து இடமாகவும் இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவு அவர்கள் எழுதினார்.
★ சிந்து சமவெளி எழுத்துக் களுக்கு Pictograph என்று பெயர். இது எகிப்து ஹைரோகுளிபிக் மற்றும் சமேரியர் க்யுனிபார்ம் எழுத்துகள் கலந்தது. ஒற்றைக் கொம்பு உடைய எழுத்து உடைய முத்திரை காணப்பட்டது.
★ இந்நாகரிகத்தின் அமைப்பு இங்கிலாந்தின் லாங்காஷயர், மான்செஸ்டர் நகரைத்தை போன்று உள்ளதாக சர்ஜான் மார்சல் கூறுகிறார்.
★ மொகஞ்சதாரோ என்ற சொல்லுக்கு Mount of Killed, Mount of Dead, Mount of Confluence , என பல பொருள்பட பொருள் உண்டு.
Comments
Post a Comment