GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes
GS - Zoology (விலங்கியல்) இரத்தம் (Blood) Notes இரத்தம் (BLOOD) ★ இரத்தம் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு - ஹெமட்டாலஜி ★ இரத்தம் என்பது திரவ நிலையில் உள்ள ஒரு இணைப்பு திசு . ஆனால் சில பண்புகளால் இணைப்பு திசுக்களில் இருந்து வேறுபடுகிறது. ★ இவை இரத்த செல்களிலிருந்து உற்பத்தியாவதில்லை. ★ எந்த விதமான செல் பிரிவு அடைவதில்லை . ★ நார் இழைகள் எதுவும் காணப்படுவது இல்லை . ★ இரத்தத்தின் சுவை - உப்புத்தன்மை. p � 7.30 - 7.40 ★ நீரைவிட கனமானது. (இரண்டரை மடங்கு அதிகம்). ★ 100 cc இரத்தம் 20 ml ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும். ★ ஆண்களில் ஐந்து முதல் ஆறு லிட்டர் வரை காணப்படும். ★ பெண்களில் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை காணப்படும். ★ இரத்தத்தின் மூலக்கூறுகளை இரண்டு ஆக்கக்கூறுகளாக பிரிக்கலாம். இரத்தத்தின் மூலக்கூறுகள் : திரவ ஆக்க கூறு பிளாஸ்மா தெளிவான மஞ்சள் நிறத்தில் காணப்படும இலேசான காரத்தன்மை கொண்டது. இரத்தத்தில் 55% காணப்படும். இதில் நீரின் சதவீதம் 92 % , புரதம் 7% மற்றும் உப்பு 1% அல்புமின் - 4.4 % - சவ்வுடு பரவல் அழுத்தத்தை நடைமுறைப்படுத்தும் குளோபிலின் - 2.3 % - எதிர் பொருள் உற...