TNPSC - பொதுத்தமிழ் சங்க இலக்கியம்...!
TNPSC - பொதுத்தமிழ் சங்க இலக்கியம்...! ◆ சேர மன்னர்கள் பத்துபேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல் எது? - பதிற்றுப்பத்து ◆ பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள திணை எது? - பாடாண் திணை ◆ பதிற்றுப்பத்தில் கிடைக்காத பகுதிகள் எது? - முதல் பத்தும் இறுதிப் பத்தும் ◆ பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாட்டுடை தலைவன் யார்? - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ◆ இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றி பாடியதால் குமட்டூர்க் கண்ணனார் பரிசாக பெற்றது எது? - உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் ◆ 'யாணர்" எனும் சொல்லின் பொருள்? - புது வருவாய் ◆ மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த ஆண்டு? - 1900 ◆ மயிலை சீனி. வேங்கடசாமி இயற்றிய நூல்கள்? கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ◆ மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு? - 1980 ◆ களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலை இயற்றிய...